மகாளய அமாவாசை எதிரொலி - ஜி.எஸ்.டி.சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை, 10 அக்டோபர் (ஹி.ச.) மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபடுவதுடன், பலரும் தங்களது வாகனங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது இருசக்கர மற்றும்
Traffic


சென்னை, 10 அக்டோபர் (ஹி.ச.)

மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபடுவதுடன், பலரும் தங்களது வாகனங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் வண்டலூர் இரணியம்மன் கோவிலுக்கு வந்தனர்.

இதனால் கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஒரே நேரத்தில் ஏராளமானோர் கோவிலுக்கு வந்ததால், வாகனங்களை நிறுத்துவதிலும், கோவிலுக்குள் செல்வதிலும் நெரிசல் ஏற்பட்டது. இதன் தாக்கமாக, ஜி.எஸ்.டி. சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவிலுக்குச் செல்லும் வாகனங்களும், அந்த வழியாகச் செல்லும் பிற வாகனங்களும் அதிகரித்ததால் சாலையில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன.

இதனால் வேலை மற்றும் பிற தேவைகளுக்காகப் பயணம் செய்தவர்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் சிரமத்தைச் சந்தித்தனர்.

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் கோவில்களுக்குப் பொதுமக்கள் அதிகளவில் வருகை தருவது வழக்கம். அதன்படி, மகாளய அமாவாசையை முன்னிட்டு வண்டலூர் பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகரித்ததால் இந்த நெரிசல் ஏற்பட்டது.

கோவிலுக்குச் செல்லத் திட்டமிடும் பொதுமக்கள், போக்குவரத்து நிலவரத்தைக் கருத்தில் கொண்டு பயணத்தை மேற்கொள்வது அவசியமாகியுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V