புதுவண்ணாரப்பேட்டையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டு -கையும் களவுமாக சிக்கிய இளைஞர்
சென்னை, 10 அக்டோபர் (ஹி.ச.) புதுவண்ணாரப்பேட்டையில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு சுமார் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் வந்துள்ளார். தனது செல்போனைச் சர்வீஸ் செய்ய வேண்டும் என்று கூறிய அவர், அங்கிருந்
Cell phone


சென்னை, 10 அக்டோபர் (ஹி.ச.)

புதுவண்ணாரப்பேட்டையில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு சுமார் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.

தனது செல்போனைச் சர்வீஸ் செய்ய வேண்டும் என்று கூறிய அவர், அங்கிருந்த ஊழியரிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.

ஊழியர் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, கடையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போனை அந்த இளைஞர் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

சிறிது நேரத்திற்குப் பிறகு கடையில் இருந்த செல்போன் காணாமல் போனதை உணர்ந்த உரிமையாளர், அதிர்ச்சியடைந்தார்

இதையடுத்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகளை அவர் ஆய்வு செய்தார்.

அப்போது, இளைஞர் கடைக்கு வந்து ஊழியரிடம் பேசுவதும், பின்னர் செல்போனை எடுத்துச் செல்வதும் பதிவாகியிருந்ததாகத் தெரிகிறது.

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அந்த இளைஞரைப் பிடித்த கடை உரிமையாளர், அவரைப் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடைக்கு வந்த இளைஞர் செல்போனைத் திருடியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V