Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை, 10 அக்டோபர் (ஹி.ச.)
புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவதால், இலவச தரிசன டோக்கன் பெறாமல் வரும் பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கு முன்பதிவு செய்த பக்தர்கள், சுமார் 2 முதல் 3 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருமலைக்கு வருவதால், கோவில் வளாகம் மற்றும் தரிசன வரிசைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, ஒரே நாளில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம் ரூ.4 கோடியே 55 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுவதால், இந்தக் காலகட்டத்தில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Hindusthan Samachar / LOGESHWARI V