சென்னை தீவுத்திடலில் ராகுல் காந்தி பங்கேற்ற ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சி – 6-வது பதிப்பு நிறைவு!
சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.) சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி, வேலைவாய்ப்புப் பிரச்ச
மாணிக்கம் தாகூர்


சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி, வேலைவாய்ப்புப் பிரச்சினைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது

தமிழ்நாட்டு இளைஞர்களின் உரிமை முழக்கமாய் சென்னை தீவுத்திடலில் நேற்று ஒலித்த மாணவர்களின் குரல்- 6-வது பதிப்பு, எதிர்பார்ப்புகளையெல்லாம் மிஞ்சி மிகப்பெரிய எழுச்சிமிகு வெற்றியைப் பெற்றுள்ளது!

தமிழ்நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவச் செல்வங்களின் குரலை நேரில் கேட்டு, அவர்களின் குறைகளையும் கல்வி-வேலைவாய்ப்புப் பிரச்சனைகளையும் மத்திய பாஜக-RSS அரசின் பிடியிலிருந்து மீட்டெடுக்க உறுதியளித்த நமது மக்கள் தலைவர் திரு. @RahulGandhi அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தமிழ்நாட்டு மாணவர்களின் குரலை தேசிய அளவில் எதிரொலித்து, இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டியுள்ளார் நம் தலைவர்.

இப்பயணத்தின் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களை நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நேரில் சந்தித்ததும், இருவரின் சந்திப்பிலும் வெளிப்பட்ட சகோதரத்துவ உணர்வும், அன்பும் மிகுந்த நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

தங்களின் சிறப்பான பாடல்களாலும் வசீகரிக்கும் இசையாலும் நேற்றைய மாலையை மாணவர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிய இசைக்கலைஞர் அவர்களுக்கும், ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ இசைக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

கடந்த செப்டம்பர் 23 அன்று இந்நிகழ்வு அறிவிக்கப்பட்டது முதல் இன்று வரை, அயராது களப்பணியாற்றி இம்மாபெரும் எழுச்சி நிகழ்வைச் சீரிய முறையில் திட்டமிட்டு நடத்திய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், முன்னாள் மாநிலத் தலைவர்கள், இந்நாள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் இரவு பகல் பாராது உழைத்த அனைத்து பொறுப்பாளர்களுக்கும், காங்கிரஸ் தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்!

மாணவர்களின் குரல்' 6-வது பதிப்பை எழுச்சியோடு நடத்தி, நம் அன்பிற்குரிய தலைவர் ராகுல் காந்தி அவர்களை வரவேற்றதில் தமிழ்நாடு மிகுந்த பெருமிதம் கொள்கிறது! உரிமைக் குரல் ஓங்கட்டும், இளைஞர் சக்தி வெல்லட்டும்!

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam