பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, உரிமைகளை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை - அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி
தமிழ்நாடு, 11 அக்டோபர் (ஹி.ச.) சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் உரிமைகளை உறுதி செய்வது அனைவரின் தலையாய கடமை என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தெரிவித்த
Jagadeeshwari.,TN Minister


தமிழ்நாடு, 11 அக்டோபர் (ஹி.ச.)

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் உரிமைகளை உறுதி செய்வது அனைவரின் தலையாய கடமை என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

பெண் குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்கவும், தன்னம்பிக்கையுடன் வளரவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண் குழந்தைகள் அச்சமின்றி வாழவும், அனைத்துத் துறைகளிலும் சாதனைகள் படைக்கவும் ஏற்ற சூழலை உருவாக்குவது நமது பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பெண் குழந்தைகளைக் காப்போம், கல்வி கற்பிப்போம், அவர்களின் கனவுகளுக்குச் சிறகுகள் கொடுப்போம் என வலியுறுத்தியுள்ளார்.

பெண் குழந்தைகளின் உரிமைகள், சமத்துவம் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதன் மூலம் வலிமையான பெண்களைக் கொண்ட வளமான சமுதாயத்தை உருவாக்குவோம் என்றும், அனைத்து பெண் குழந்தைகளுக்கும் சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P