பிரதமர் நரேந்திர மோடி தமிழக வருவதற்கு எதிர்ப்பு- இந்திய மாணவர் சங்கத்தினர் குண்டு கட்டாக கைது
திண்டுக்கல், 11 அக்டோபர் (ஹி.ச.) சென்னை பூந்தமல்லி மெட்ரோ ரயில் திட்ட துவக்க விழாவிற்கு. இன்று 11.10.26 தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்
க


திண்டுக்கல், 11 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை பூந்தமல்லி மெட்ரோ ரயில் திட்ட துவக்க விழாவிற்கு. இன்று 11.10.26 தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி திண்டுக்கல் எல் ஜி பி காம்பவுண்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் சேர்ந்த பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வருகை தந்தனர்.

அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு பலூன்களை வானில் பறக்க விட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கருப்பு கொடியையும் பலுனையும் பறிக்க முற்பட்டனர் இதனால் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காவல்துறையின் செயலை கண்டித்து தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முற்பட்டனர் ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கைகோர்த்து தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை எடுத்து காவல்துறையினர் அனைவரையும் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

இதனால் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

Hindusthan Samachar / Durai.J