பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் திட்டம் - காங்கிரஸ் நிர்வாகி வீட்டுக் காவலில் வைப்பு
சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்பு பலூன்களைப் பறக்கவிடவும், எதிர்ப்பு பதாகைகளைக் காட்டவும் திட்டமிட்டதாகக் கூறப்படும் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முகமது நவ்ஷத் அலியை போலீசார்
காங்கிரஸ்


சென்னை, 11 அக்டோபர் (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்பு பலூன்களைப் பறக்கவிடவும், எதிர்ப்பு பதாகைகளைக் காட்டவும் திட்டமிட்டதாகக் கூறப்படும் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முகமது நவ்ஷத் அலியை போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 10 எதிர்ப்பு பதாகைகள் மற்றும் 6 கருப்பு பலூன்களைப் பறிமுதல் செய்தனர்.

பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 11) சென்னை வருகை தந்து, பூந்தமல்லி–வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்க உள்ளார். இதையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் வருகையின்போது எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சூழலில், எதிர்ப்பு பதாகைகள் மற்றும் கருப்பு பலூன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam