சாத்தான்குளம் அருகே டீக்கடை முன்பு கோர விபத்து – பக்தர் மீது மோதிய சொகுசு கார்
தூத்துக்குடி, 11 அக்டோபர் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள், சாத்தான்குளம் அருகே மணிநகர் ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள டீக்கடை முன்பு தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடித்துக் கொண
சாலை விபத்து


தூத்துக்குடி, 11 அக்டோபர் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள், சாத்தான்குளம் அருகே மணிநகர் ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள டீக்கடை முன்பு தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார், டீக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. தொடர்ந்து, அதன் அருகே அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த பக்தர் மீதும் கார் மோதியது. இதில், அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார்.

விபத்தில் காயமடைந்த பக்தர் வலியால் துடித்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருட்டான பகுதியில் மறைந்து நின்றதாகக் கூறப்படும் காரைத் தேடிச் சென்ற அப்பகுதி மக்கள், காரில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

டீக்கடை முன்பு பக்தர் மீது சொகுசு கார் மோதிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam