மாநில அளவிலான அதி விரைவு செஸ் போட்டி- 3 வயது சிறுமி முதல் 60 வயது முதியவர் வரை ஆர்வம்!
புதுக்கோட்டை, 11 அக்டோபர் (ஹி.ச.) புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ் (SFS) பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான அதி விரைவு (Rapid) செஸ் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் உற்சாகமாகப் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்ப
க


புதுக்கோட்டை, 11 அக்டோபர் (ஹி.ச.)

புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ் (SFS) பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான அதி விரைவு (Rapid) செஸ் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் உற்சாகமாகப் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இந்தப் போட்டியில் 3 வயது சிறுமி ஒருவர், 60 வயது முதியவருடன் போட்டி போட்டு செஸ் காய்களை நகர்த்தி விளையாடியது பார்வையாளர்களை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

வயது வரம்பின்றி அனைவரையும் ஈர்த்த இக்காட்சி போட்டியின் முக்கியமாக அமைந்தது.

100/30 பிரிவில் ஹரிணித்து என்ற சிறுவன் காட்டிய சிறப்பான ஆட்டமும், திறமையும் அங்கிருந்த பார்வையாளர்களைக் கவர்ந்து பாராட்டுகளைப் பெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் திறமையான வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான செஸ் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சதுரங்க விளையாட்டின் மீது அனைத்து வயதினருக்கும் உள்ள ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இப்போட்டி, விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / Durai.J