தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முதல்வர் உறுதி எடுத்துள்ளார் - கருப்பையா எம்.எல்.ஏ.
மதுரை, 11 அக்டோபர் (ஹி.ச.) மதுரை வடக்கு மாவட்டம் சோழ வந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக 1895 அக்டோபர் 10 முல்லைப் பெரியாறு அணையை கர்னல் பென்னிகுக் திறந்த தினத்தை முன்னிட்டு வாடிப்பட்டி ஜெமினி பூங்கா முன்பாக அவரது திருவுருவ ப்படத்திற்கு
க


மதுரை, 11 அக்டோபர் (ஹி.ச.)

மதுரை வடக்கு மாவட்டம்

சோழ வந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக 1895 அக்டோபர் 10 முல்லைப் பெரியாறு அணையை கர்னல் பென்னிகுக் திறந்த தினத்தை முன்னிட்டு வாடிப்பட்டி ஜெமினி பூங்கா முன்பாக அவரது திருவுருவ ப்படத்திற்கு தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் கருப்பையா எம்.எல்.ஏ.தலைமை தாங்கி

மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மதுரை, திண்டுக்கல்,

தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்கக் கூடிய முல்லைப் பெரியாறு அணை யை கட்டிய கர்னல் பென்னிகுக் 1895 அக்டோபர் 10 ம் தேதி திறந்து வைத்தார்.

அந்த நாளை நினைவு கூறும் வகையில் இன்றுஅவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அவரை என்றும் நினைவு கூறும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கும், பெரியார் அணை கட்டிய போது அவர் வசித்த இடத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கும் பென்னி குக் பெயர் சூட்ட தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

தாராபுரம்,மதுராந்தகம் சட்டமன்ற இடை தேர்தலின் வெற்றி தமிழக முதல்வரின் ஐந்து மாத நல்லாட்சிக்கு சான்றாக அமைந்துள்ளது.

மக்களின் கோரிக்கைகள்,கடந்த ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட மின்தடை பிரச்சனைகள், தேர்தல் வாக்குறுதிகள் எதுவாக இருந்தாலும் சரி அடுத்தடுத்து ஒவ்வொன்றாக

படிப்படியாக நிறைவேற்ற முதல்வர் உறுதி எடுத்துள்ளார் இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வாடிப்பட்டி நீரேத் தான் உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் பெரியார் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள்,

மாவட்ட பொருளாளர் ராஜேஷ் கண்ணா, வழக்கறிஞர் அழகேசன், ஒன்றிய செயலாளர்கள் தமிழன் தாமு தியாகராஜன், சரவணன், ஹரீஸ்,பேரூர் செயலாளர் பசுமணியன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுஜிதா, லட்சுமி,மாவட்ட குழு உறுப்பினர் கார்த்திக், நந்தகோபால், கணேசன், ராஜேந்திரன், மதுசூதனன், ஹரி, விக்னேஷ், உள்ளிட்டஏராளமான தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / Durai.J