தங்கம் விலை கணிசமாக குறைவு - நகைப் பிரியர்கள் நிம்மதி!
சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.) அக்டோபர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அந்த வகையில் நேற்று முன் தினம் 22 காரட் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,880க்கும், சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,11
தங்கம்


சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.)

அக்டோபர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அந்த வகையில் நேற்று முன் தினம் 22 காரட் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,880க்கும், சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,11,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து வார தொடக்கமான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,840க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது.

அதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ. 11,370க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.90,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P