கோவையில் ரூ.300 கோடியில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகம் வரும் 16ஆம் தேதி திறப்பு!
கோவை, 12 அக்டோபர் (ஹி.ச.) கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழா வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, விழாவுக்கான முன்னேற்பாட்டுப் ப
பெரியார் அறிவுலகம்


கோவை, 12 அக்டோபர் (ஹி.ச.)

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழா வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, விழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எட்டு தளங்களுடன் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுலகத்தில் ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்ட நூலகம், கோளரங்கங்கள், அறிவியல் மையம், குழந்தைகளுக்கான வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே அறிவியல் அறிவையும் ஆராய்ச்சித் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரியார் அறிவுலகத்தின் திறப்பு விழா வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய் வரும் 16ஆம் தேதி கோவை வருகை தர உள்ளார். இதையொட்டி, விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Hindusthan Samachar / GOKILA arumugam