Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 12 அக்டோபர் (ஹி.ச.)
ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஓடைகளைத் தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றித் தூய்மைப்படுத்துதல், பாதாள சாக்கடைகளை
சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும் போது,
மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்குத் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
அதேபோல் பொங்கல் இலவச வேட்டி மற்றும் சேலை உற்பத்திப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் நெசவாளர்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும்,
நெசவாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட ஐவர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இந்த வாரத்திலேயே கூலி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார்.
Hindusthan Samachar / Durai.J