கிராம கோவில் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த வந்த அதிகாரிகள் - கிராம மக்கள் தடுத்து நிறுத்தி முற்றுகைப் போராட்டம்!
உசிலம்பட்டி, 12 அக்டோபர் (ஹி.ச.) மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வண்டாரி ஊராட்சிக்குட்பட்ட மெய்யனூத்துப்பட்டி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 300 ஆண்டுகள் பழமை
க


உசிலம்பட்டி, 12 அக்டோபர் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வண்டாரி ஊராட்சிக்குட்பட்ட மெய்யனூத்துப்பட்டி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு சுமார் 300 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவில் உள்ளது.

இந்த நிலையில் கோவில் புனரமைப்பு பணிகளால் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

இதில் கோவில் வழியாக அருகில் உள்ள சாப்டூர் ஊராட்சிக்குட்பட்ட சங்கரலிங்காபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் இப்பகுதியை நடைபாதையாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் சங்கரலிங்காபுரம் கிராமத்தினர் இறந்தவர்களை எடுத்துச் சென்று மெய்யனூத்துப்பட்டி மயானத்தில் அடக்கம் செய்யப்படுவதாகவும் கூறி கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சங்கரலிங்காபுரம் கிராமத்தினர் கோவில் கட்டும் பணியினை பேரையூர் வட்டாட்சியர் முகிபாலன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வந்தவரகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் கோவில் கட்டுமான இடத்தில் பெண்கள் அருள்வந்து சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சங்கரலிங்காபுரம் மக்கள் செல்வதற்கு மாற்றுப்பாதை உள்ளது எனவும் எனவே கோவில் கட்டுமான பணியினை தடுத்து நிறுத்தாமல் பணியினை மேற்கொள்ள உத்தரவிட வேண்டுமென கூறப்படுகிறது.

இதில் பேரையூர் உதவி காவல் துணை கண்காணிபாளர்

சீலா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இரு கிராம மக்களையும் பேரையூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த முற்றுகை போராட்டத்தால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Hindusthan Samachar / Durai.J