Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.)
சென்னையில் தற்போது நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழா கொண்டாட்டங்களின் நடுவே, வேளச்சேரி சாலை குருநாதன் காலேஜ் அருகில் வசிக்கும் வழக்கறிஞர் ஜெயலட்சுமி என்பவரது வீட்டில் அரங்கேறியுள்ள ஒரு விசேஷமான நிகழ்வு பலரையும் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக வீடுகளில் நவராத்திரி கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டால், அங்கு வளர்க்கப்படும் நாய்கள் அல்லது பூனைகள் உற்சாக மிகுதியில் அவற்றைத் தட்டிவிட்டு குறும்புச் செயல்களில் ஈடுபடுவது வழக்கம்.
ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, வழக்கறிஞர் ஜெயலட்சுமி வீட்டில் வளர்க்கப்படும் இரண்டு நாய்கள் கொலு பொம்மைகளுக்கு அருகில் மிக அமைதியாக அமர்ந்து, சாமி கும்பிடும் பக்தியோடு நடந்து கொள்ளும் விதம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தக் குடும்பத்தில் நாய்கள் மீது காட்டப்படும் அன்பும் பயிற்சியும், அவை பூஜை வேளையில் காட்டும் பவ்யமான ஒழுக்கமும் பொதுமக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
வழக்கமான பிராணிகளின் சேட்டைகளுக்கு மாறாக, இறை பக்தி போன்ற அமைதியுடன் பொம்மைகளின் அருகே நிற்கும் இந்த நாய்களின் விடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் படுவேகமாகப் பரவி, நெட்டிசன்களின் இதயங்களைக் கவர்ந்து வைரலாகி வருகிறது.
Hindusthan Samachar / Durai.J