Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.)
வேட்புமனுவில் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பாக, எத்தனை நாட்களாகும் என அறிக்கை தாக்கல் செய்ய ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனுவில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளார்.
புகார் மனு தாக்கல் செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகியும், அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாததால் மிலானி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மிலானி அளித்த புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam