Enter your Email Address to subscribe to our newsletters

விஜயநகரம் , 14 அக்டோபர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, விஜயநகரம் மாவட்ட அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜில்லா பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தனது மகள் பாெட்சா அனூஷாவை வேட்பாளராக நிறுத்த, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பாெட்சா சத்யநாராயணா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜயநகரம் ஜில்லா பஞ்சாயத்து தலைவர் பதவி இந்த முறை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பதவியைக் கைப்பற்றுவதற்கான அரசியல் வியூகங்கள் தீவிரமடைந்துள்ளன.
ஏற்கனவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஜில்லா பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் மஜ்ஜி ஸ்ரீனிவாசராவ் என்ற சின்ன ஸ்ரீனு. இவர் பாெட்சா சத்யநாராயணாவின் மருமகன் ஆவார். சமீபத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சின்ன ஸ்ரீனு இணைந்தார்.
இந்த நிலையில், ஜில்லா பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தனது மகள் சிரி சஹஸ்ராவை நிறுத்த சின்ன ஸ்ரீனு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு போட்டியாக தனது மகள் பாெட்சா அனூஷாவை களமிறக்க பாெட்சா சத்யநாராயணா ஆலோசித்து வருவதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
டாக்டரான பாெட்சா அனூஷா, தற்போது பீமிலி சட்டமன்ற தொகுதியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
கட்சித் தலைமை ஒப்புதல் அளித்தால், அவர் விஜயநகரம் ஜில்லா பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA