ஏர் இந்தியா விமானத்தைக் கடத்த முயற்சியா?- ஜெய்ப்பூரில் அவசரமாகத் தரையிறக்கம்
ஜெய்பூர், 14 அக்டோபர் (ஹி.ச.) பிராங்க்பர்ட்டில் இருந்து டெல்லிக்கு ஏ.ஐ.-2030 என்ற விமான எண்ணுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு வந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானி 7500 என்ற குறியீட்டை ஆமதாபாத் விமானப் போக்குவரத்துக் கட்டுப்
Air india Flight


ஜெய்பூர், 14 அக்டோபர் (ஹி.ச.)

பிராங்க்பர்ட்டில் இருந்து டெல்லிக்கு ஏ.ஐ.-2030 என்ற விமான எண்ணுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு வந்தது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானி 7500 என்ற குறியீட்டை ஆமதாபாத் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துக்கு சில வினாடிகள் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

விமானப் போக்குவரத்தில் 7500 என்பது விமானக் கடத்தல் அல்லது சட்டவிரோதமாக விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் சம்பவத்தைக் குறிக்கும் அவசரக் குறியீடாகும்.

இந்தக் குறியீடு பதிவானதைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை அவசரமாகத் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, விமானம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்குத் திருப்பி விடப்பட்டு, இன்று காலை தரையிறக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

தரையிறக்கப்பட்ட விமானம் தனியான பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, விரிவான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் (CISF) மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் ஏதேனும் சந்தேகத்துக்குரிய பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விமானத்தில் உண்மையாகவே கடத்தல் முயற்சி நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இந்தக் குறியீடு அனுப்பப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V