Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 14 அக்டோபர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம், விராதனூர் பகுதியில் உள்ள சத்யாநகர் அருகே நேற்று நள்ளிரவு தினேஷ் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, காரில் வந்த மர்ம கும்பல் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்தியதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து வேகமாகச் சென்ற பைக்கின் மீது அந்தக் கும்பல் காரை மோதியதாகத் தெரிகிறது.
இதனால் நிலைதடுமாறிய இரு இளைஞர்களும் பைக்கிலிருந்து சாலையில் விழுந்தனர்.
இளைஞர்கள் கீழே விழுந்ததும் காரிலிருந்து இறங்கிய மர்ம கும்பல், கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் சந்தோஷ்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றொரு இளைஞரான தினேஷும் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.
நள்ளிரவில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
படுகாயமடைந்த தினேஷை மீட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று,
சந்தோஷ்., சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
சந்தோஷின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலில் ஈடுபட்டுவிட்டுத் தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
மேலும், இந்தக் கொலை முன்பகை காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V