வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு புகார்- எதிர்க்கட்சிகளின் மனுவில் 14 குறைபாடுகள்!
புதுடெல்லி, 14 அக்டோபர் (ஹி.ச.) தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவ
Supreme court


புதுடெல்லி, 14 அக்டோபர் (ஹி.ச.)

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் உச்சநீதிமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சார்பில் கூட்டாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் முறையற்ற வகையில் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்களை விசாரிக்க, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய சுதந்திரமான குழுவை அமைக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும், மாநிலங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த புகார்களைச் சுதந்திரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாகும்.

இந்த மனு விசாரணைக்குப் பட்டியலிடப்படாததற்குக் காரணம், அதில் காணப்பட்ட நிர்வாக மற்றும் ஆவணக் குறைபாடுகளாகும்.

மொத்தம் 14 குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவற்றில் மல்லிகார்ஜுன கார்கேவின் அடையாள அட்டை நகல் தெளிவாக இல்லாதது, சில பக்கங்கள் படிக்க முடியாத நிலையில் இருப்பது, சில ஆவணங்கள் விடுபட்டிருப்பது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

மேலும், நீதிமன்றக் கட்டணக் குறைபாடு மற்றும் சில மனுதாரர்களுக்கான அங்கீகார ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகளும் சுட்டிக்காட்டப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், மனுவைத் தலைமை நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

அப்போது, மனுவில் உள்ள குறைபாடுகளை முதலில் சரிசெய்யுமாறு தலைமை நீதிபதி சூர்ய காந்த் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V