பஞ்சாப்பில் போதைப்பொருளுக்கு எதிராகப் போராடிய தன்னார்வலர் சுட்டுக்கொலை- முக்கிய குற்றவாளி கைது
பஞ்சாப், 14 அக்டோபர் (ஹி.ச.) பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தன்னார்வலர் ஜோட்டா சிலருடன் சம்பந்தப்பட்ட மருந்துக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு கடையில் போதைப
Crime


பஞ்சாப், 14 அக்டோபர் (ஹி.ச.)

பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தன்னார்வலர் ஜோட்டா சிலருடன் சம்பந்தப்பட்ட மருந்துக் கடைக்குச் சென்றுள்ளார்.

அங்கு கடையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக உரிமையாளரிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை ஜோட்டா தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்ததுடன், முகநூல் பக்கத்திலும் நேரலையாக ஒளிபரப்பியதாகக் கூறப்படுகிறது.

சுமார் ஐந்து நிமிடங்கள் வரை அந்தக் காட்சிகள் பதிவாகியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அப்போது கடையின் உரிமையாளர் அஸ்வினி குமார் தனது கைத்துப்பாக்கியை எடுத்து ஜோட்டாவை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போதைப்பொருள் விற்பனை தொடர்பாகக் கேள்வி எழுப்பியபோது ஏற்பட்ட தகராறே இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருந்ததாக முதற்கட்டத் தகவல் வெளியாக்கியுள்ளது.

ஜோட்டா உயிரிழந்ததைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் அஸ்வினி குமாரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சலாசர் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநில போலீசார் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய குற்றவாளி தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் அவரது கூட்டாளியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தன்று முதியவர் ஒருவருக்குப் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து அறிந்த ஜோட்டா கடைக்குச் சென்று உரிமையாளரிடம் விளக்கம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது அவர் வீடியோ பதிவு செய்து நேரலையில் ஒளிபரப்பியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கடை உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டதாகத் தகவல்கள் கூறப்படுகிறது

Hindusthan Samachar / LOGESHWARI V