ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2-வது நாளாக இடி, மின்னலுடன் கனமழை!
திருப்பத்தூர், 15 அக்டோபர் (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் ஏற்பட்ட வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் பெரிதும் அவதிப
மழை


திருப்பத்தூர், 15 அக்டோபர் (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் ஏற்பட்ட வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் ஆம்பூர் பகுதியில் சிறிது நேரம் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து, இன்று பிற்பகல் வானில் கருமேகங்கள் சூழ்ந்து, ஆம்பூர் நகரம், நாயக்கனேரி, பனங்காட்டேரி மலைக்கிராமம், கம்பிகொல்லை, ரெட்டித்தோப்பு, சான்றோர்குப்பம் மற்றும் வாணியம்பாடி அருகே உள்ள திம்மாம்பேட்டை, ஆலங்காயம், செட்டியப்பனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

தொடர்ந்து 2-வது நாளாகப் பெய்த மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, மழையின்போது இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் திறந்தவெளிப் பகுதிகள், தனிமையான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அருகே நிற்பதைத் தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam