ஆயுத பூஜை தொடர் விடுமுறை - செங்கல்பட்டு, மறைமலைநகரில் தற்காலிக பேருந்து சேவை தொடக்கம்!
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.) ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர். இதனால் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பயணிகளின் வசதிக்காகத் தற்க
Bus stop


சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர்.

இதனால் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பயணிகளின் வசதிக்காகத் தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி, செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தத் தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வேதாரண்யம், பட்டுக்கோட்டை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்குப் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆயுத பூஜை விடுமுறையைக் கொண்டாடச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பாக, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் தங்களது ஊர்களுக்குச் செல்ல வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பயணத்தை எளிதாக்கவும் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதால், அந்த வழித்தடங்களைப் பயன்படுத்தும் பயணிகளுக்குக் கூடுதல் வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் முன்பாக, பேருந்துகள் புறப்படும் நேரம், இயக்கப்படும் வழித்தடங்கள் மற்றும் பேருந்து சேவை தொடர்பான விவரங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வது அவசியம்.

குறிப்பாக, ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால், கடைசி நேரப் பரபரப்பைத் தவிர்க்கும் வகையில் தங்களது பயணத்தைத் திட்டமிடலாம் என்று போக்குவரத்து கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V