Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)
தமிழக ஆளுநராகப் பதவி வகித்து வந்த ஆர்.என். ரவி, கடந்த மார்ச் 5-ஆம் தேதி மேற்கு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதனால் தமிழகத்திற்குப் புதிய ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், கேரள ஆளுநராக இருந்த ஆர்.வி. அர்லேகர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு நிகழ்வில் அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தவர் ஆர்.வி. அர்லேகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தமிழகத்திற்கு முழுநேர ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்ததால், புதிய நியமனம் குறித்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இதற்கு முன்பு, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் கிரண் ரெட்டி தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின.
ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்தச் சூழலில்,
தமிழகத்தைச் சேர்த்து ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனத்தைத் தொடர்ந்து, ஆளுநர் அர்லேகருக்கு முதலமைச்சர் விஜய் சமூக வலைத்தளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனுக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், ஆளுநரை நேரில் சந்தித்தார்.
அப்போது, ஆளுநர் அர்லேகருக்குப் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V