கர்நாடகத்தின் புதிய கவர்னராக சுதா யாதவ் இன்று பொறுப்பேற்கிறார்
கர்நாடக, 16 அக்டோபர் (ஹி.ச.) கர்நாடக மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட் இதுவரை பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அவருக்குப் பதிலாக சுதா யாதவை புதிய ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 12ஆம் தேதி உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள
Sudha yadhav


கர்நாடக, 16 அக்டோபர் (ஹி.ச.)

கர்நாடக மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட் இதுவரை பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அவருக்குப் பதிலாக சுதா யாதவை புதிய ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 12ஆம் தேதி உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுதா யாதவின் குடும்பப் பின்னணியும் கவனம் பெற்றுள்ளது. அவரது கணவர் சுக்பீர் சிங் யாதவ், எல்லைப் பாதுகாப்புப் படையில் கமாண்டராகப் பணியாற்றியவர். கார்கில் போரின்போது அவர் உயிரிழந்தார்.

சுதா யாதவின் பதவியேற்பு விழா பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையின் கண்ணாடி மாளிகையில் நடைபெற உள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி விபு பக்ரு, புதிய ஆளுநருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சுதா யாதவ் நேற்று மாலை விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தடைந்தார். பின்னர் அவர் ஆளுநர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார்.

சுதா யாதவ் கர்நாடக மாநிலத்தின் 14-வது ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ளார். மேலும், மாநிலத்தின் இரண்டாவது பெண் ஆளுநர் என்ற பெருமையையும் அவர் பெறுவார் எனக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு வி.எஸ். ரமாதேவி 1999ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை கர்நாடக ஆளுநராகப் பணியாற்றியுள்ளார். அவருக்குப் பிறகு சுதா யாதவ் பெண் ஆளுநராகப் பொறுப்பேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / LOGESHWARI V