Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 16 அக்டோபர் (ஹி.ச.)
திருவனந்தபுரத்தில் இருந்து ஐதராபாத் நோக்கிச் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சம்பவத்தன்று இரவு இளம்பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.
ரயில் திருவனந்தபுரம் அருகே உள்ள முருக்கும்புழா பகுதியை அடைந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். சக பயணிகள் நிலைமையை உணர்ந்து செயல்படுவதற்குள், ரயில் நின்றபோது அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், திருவனந்தபுரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
ரயிலில் நடந்த சம்பவம் தொடர்பாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குற்றச்சாட்டில் தொடர்புடைய நபரை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
விசாரணையில், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர் கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை பகுதியைச் சேர்ந்த எட்வின் ஜோஸ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, திருவனந்தபுரம் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு பி. நாயர் தலைமையிலான போலீசார் மற்றும் பாறசாலை ரயில்வே போலீசார் அடங்கிய தனிப்படையினர் குழித்துறைக்குச் சென்றனர்.
அங்கு எட்வின் ஜோஸை போலீசார் இன்று கைது செய்து.,
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மீது கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட எட்வின் ஜோஸை போலீசார் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரயிலில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V