Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 17 அக்டோபர் (ஹி.ச.)
திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
தமிழக அரசின் செயல்பாடுகள், கோயில் நிர்வாகம், பேருந்து திட்டங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பதாகக் குறிப்பிட்ட ஜியர், தற்போதைய அரசு ஈ.வெ.ரா.வை வணங்கிவிட்டு ஆட்சி நடத்துவதாக விமர்சித்தார்.
கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிப்பது நல்ல திட்டமாக இருந்தாலும், அதைப் பயன்படுத்தி பக்தர்களுக்குத் தொந்தரவு அளிக்கக் கூடாது என்றார்.
சில கட்டணங்களை அரசு ரத்து செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், கோயில்களில் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் விமர்சித்தார்.
தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'வெற்றிப் பயணம்' திட்டம் பயனற்றது என அவர் விமர்சித்தார்.
முந்தைய திமுக ஆட்சியில் பேருந்துகளுக்கு வண்ணம் பூசி இலவசப் பேருந்து திட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், தற்போதைய அரசு பேருந்துகளின் வெளித்தோற்றத்தை மாற்றி 'வெற்றிப் பயணம்' எனப் பெயரிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால் மக்களுக்கு குறிப்பிடத்தக்க பயன் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தங்களுக்கு ஒன்றுதான் என்றும், நாடும் தர்மமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பாகவும் செண்டலங்கார ஜியர் கருத்து தெரிவித்தார். வேலைக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்பவர்கள், அரசியல் தூண்டுதலின் பேரில் படிவம் 6 மூலம் அங்கு வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படுவதாகவும், இதனால் சொந்த ஊரிலும் பணிபுரியும் இடத்திலும் பெயர்கள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய இரட்டைப் பதிவுகளை நீக்குவதே நடவடிக்கையின் நோக்கம் எனக் கூறினார்.
மேலும், ராகுல் காந்திக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் குடியுரிமை இருப்பதாக அவர் கூறிய கருத்தையும் முன்வைத்தார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒருவருக்கு ஒரே வாக்கு என்ற நடைமுறை நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றும் செண்டலங்கார ஜியர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V