Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ் திரை உலகின் பிரபலம் இசையாமைப்பாளர் தேவா மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.. அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.. முன்னதாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில்,
தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா, குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ் வெகுசன இசை வரலாற்றில் தேவாவின் பங்களிப்பை ஒருபோதும் தவிர்த்துவிட்டு எழுத முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கானா பாடல்களைத் தமிழ்த் திரையிசையில் பிரபலப்படுத்தியதில் தேவாவுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகத் தெரிவித்த அவர், “கானா என்றாலே தேவாதான்” என அறியப்படும் அளவுக்கு அந்த இசை வடிவத்தில் அவர் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றிருந்தார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் கோலோச்சிய காலத்திலும், தேவா தனக்கெனத் தனிப்பாதையை அமைத்துக்கொண்டு வெற்றிபெற்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘தேனிசைத் தென்றல்’ என்ற பட்டத்தை முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தேவாவுக்கு வழங்கியதையும் தனது இரங்கல் பதிவில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் திரையிசையில் பல்வேறு வெற்றிப் பாடல்களை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த தேவாவின் மறைவு இசை உலகிற்குப் பேரிழப்பாக அமைந்துள்ளது.
அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் ஸ்டாலின் தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V