திருப்பதியில் அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா!
திருப்பதி, 17 அக்டோபர் (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா, இந்த ஆண்டு கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, மலையப்ப சுவாமி பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், அன்ன வாகனம், கல்ப வ
Thirupathi


திருப்பதி, 17 அக்டோபர் (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா, இந்த ஆண்டு கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, மலையப்ப சுவாமி பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், அன்ன வாகனம், கல்ப விருட்ச வாகனம், முத்துப் பந்தல் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை இன்று இரவு நடைபெற்றது. இதற்காக மலையப்ப சுவாமி தங்கம், வைரம், பச்சை மரகதம் உள்ளிட்ட விலைமதிப்புமிக்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

சுவாமியைத் தரிசிப்பதற்காகத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டு வழிபட்டனர்.

இதற்கிடையே, இன்று மதியம் முதல் திருப்பதியில் கனமழை பெய்து வந்தது. இருப்பினும், மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் நான்கு மாட வீதிகளிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மழைக்கு மத்தியிலும் பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா கோஷங்கள் அப்பகுதி முழுவதும் பக்தி உணர்வை ஏற்படுத்தின.

பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளில் காலையில் அனுமந்த வாகனத்திலும், இரவில் தங்கக் கருட வாகனத்திலும் மலையப்ப சுவாமி எழுந்தருளியது பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதனால் திருப்பதி கோயில் வளாகம் மற்றும் நான்கு மாட வீதிகளிலும் விழாக்கோலம் நிலவியது.

Hindusthan Samachar / LOGESHWARI V