Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி, 18 அக்டோபர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினர் தடைகளை ஏற்படுத்துவதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் அனில் சந்திர புனேதாவை நேரில் சந்தித்த அவர், புகார் மனு அளித்தார். அதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கள் கட்சி வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தெலுங்கு தேசம் கட்சியினர் தடுத்து வருவதாகவும், சில இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வேட்புமனுக்களைப் பெற மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தெலுங்கு தேசம் கட்சியினரின் செயல்களுக்கு போலீசார் துணைபோவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நகராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால், தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெகன் வலியுறுத்தினார்.
வேட்புமனு தாக்கல் செய்வதில் எவ்வித தடையும் ஏற்படாத வகையில் சுதந்திரமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA