Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை முழுவதும் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற்றுவதற்காக, 100 ஹெச்பி திறன் கொண்ட மோட்டார்கள் கடந்த ஒரு மாதமாகவே நிறுவப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே, தேங்கிய மழைநீரை விரைவாக வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தவெக தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாப்பதிலும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனிக் கவனம் செலுத்தி வருவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
வெள்ளம் ஏற்பட்ட பிறகு அவசரமாக நடவடிக்கை எடுப்பதைவிட, பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்த நிர்வாகம் என்றும் தவெக தனது பதிவில் வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, மழைநீரை வெளியேற்றுவதற்குத் தேவையான உபகரணங்களை முன்கூட்டியே நிறுவி, அவற்றைத் தயார் நிலையில் வைத்திருப்பது முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P