தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களாக இருவர் நியமனம்!
சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.) தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்களாக டாக்டர் ஆர். ராஜயவர்தனன் மற்றும் டாக்டர் என். விஜயராஜ் ஆகிய இருவரையும் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, திருச்சிராப்பள்
தலைமைச் செயலகம்


சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்களாக டாக்டர் ஆர். ராஜயவர்தனன் மற்றும் டாக்டர் என். விஜயராஜ் ஆகிய இருவரையும் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் ஆர். ராஜயவர்தனன், சட்டப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக மூன்று ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், முன்னாள் சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞரும், தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினராக இருப்பவருமான டாக்டர் என். விஜயராஜும், சட்டப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டக் கல்வியை வழிநடத்தும் முக்கியப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அமைப்பான சிண்டிகேட்டில் இவ்விருவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P