காஞ்சிபுரம் மருத்துவமனையில் பாதியிலேயே நின்ற லிஃப்ட்-நேயாளி உட்பட 6பேர் சிக்கி தவிப்பு!
காஞ்சிபுரம் , 18 அக்டோபர் (ஹி.ச.) காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் சன்னதி தெரு பகுதியில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனையான ஜனனி மருத்துவமனையில் நேற்றிரவு தீடிரென மின் இணைப்பானது அப்பகுதி முழுவதும் துண்டிக்கப்பட்டு பின்னர் சற்று நேர்ந்திலேயே மீண்டும
A


காஞ்சிபுரம் , 18 அக்டோபர் (ஹி.ச.)

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் சன்னதி தெரு பகுதியில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனையான ஜனனி மருத்துவமனையில் நேற்றிரவு தீடிரென மின் இணைப்பானது அப்பகுதி முழுவதும் துண்டிக்கப்பட்டு பின்னர் சற்று நேர்ந்திலேயே மீண்டும் மின் இணைப்பு கொடுகக்ப்பட்ட நிலையில் அங்குள்ள

லிஃப்ட்-ல் குறைந்த மின்னழுத்தம் கிடைக்கபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த காஞ்சனா எனும் நோயாளி பெண்மணி ஒருவர் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்லவிருந்தவறை மருத்துவ பணியாளர்கள் லிஃப்ட் அழைத்து வர முற்ப்பட்ட போது தீடிரென லிஃப்ட் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பாதிலேயே நின்று பழுதாகி லிஃப்ட்-ல் நோயாளி உட்பட 6பேர் சிக்கினர்.

இது குறித்து காஞ்சிபுரம் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கும் தகவல் கொடுகக்பப்ட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சாதூர்யமாக லிஃப்ட்-ல் சிக்கியிருந்த வர்களை சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக போராடி பத்திரமாக பாதுகாப்புடன் மீட்டனர்.

மருத்துவமனை ஒன்றில் நேயாளியுடன் 6பேர் சிக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA