Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 18 அக்டோபர் (ஹி.ச.)
கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற சோர்சிபகன் பொது துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சோர்சிபகன் பொது துர்கா பூஜை பந்தலில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் பல பக்தர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்த அமித் ஷா, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் பக்தர்களை நேரில் சந்தித்தார்..
அப்போது, அவர்களது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததுடன், காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், இந்தத் துயரமான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அமித் ஷா தனது சமூக வலைதளப் பதிவில், இந்தக் கடினமான சூழலில் மேற்கு வங்க அரசு காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விபத்தில் காயமடைந்த பக்தர்கள் அனைவரும் விரைவில் முழுமையாகக் குணமடைய வேண்டும் என மா துர்காவிடம் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியும் உடனிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V