விமான விபத்தில் உயிர் பிழைத்தது அதிசயம்- பைலட் ஸ்மிட் மச்சார் பேட்டி
புதுடெல்லி, 18 அக்டோபர் (ஹி.ச.) விமானத்தில் பயணம் செய்தவர்களின் உயிரைக் காப்பாற்றப் போராடிய தருணங்களை, பலத்த காயமடைந்த பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார் நினைவுகூர்ந்துள்ளார் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், விபத்தின்போது ஏற்பட்ட அதிர்
Pilot smit


புதுடெல்லி, 18 அக்டோபர் (ஹி.ச.)

விமானத்தில் பயணம் செய்தவர்களின் உயிரைக் காப்பாற்றப் போராடிய தருணங்களை, பலத்த காயமடைந்த பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார் நினைவுகூர்ந்துள்ளார்

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,

விபத்தின்போது ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

விமானம் வழக்கம்போல் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், தனது தலையில் பலமாக அடிபட்டதாகவும், அதன் பின்னர் அவ்வப்போது சுயநினைவை இழந்து மீண்டும் பெற்றதாகவும் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் தான் உயிர் பிழைப்போமா என்ற அச்சம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட சூழலை நினைவுகூர்ந்த கேப்டன் ஸ்மிட் மச்சார், தன்னால் ஏதாவது செய்ய முடியும் என்ற உணர்வு ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

தனது மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், தானும் பயணிகளும் உயிர் பிழைத்தது ஓர் அதிசயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விமானம் சீராகச் சென்று கொண்டிருந்தபோது, துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி பிரார்த்தனை செய்ய விரும்பியதாகவும் அவர் தெரிவித்தார். துணை விமானி பிரார்த்தனை செய்துகொண்டிருந்த நேரத்தில், தான் தனது பணியில் கவனம் செலுத்தியதாகவும் கூறினார்.

விபத்துக்குப் பிறகு கதவைத் திறந்தபோது அங்கிருந்த சூழல் முற்றிலும் மாறியிருந்ததாக கேப்டன் ஸ்மிட் மச்சார் தெரிவித்தார். தாம் தரையில் விழுந்து கிடந்தபோதிலும், அங்கு நிலவிய பீதியும் மக்களின் அலறல் சத்தமும் இன்னும் நினைவில் இருப்பதாகக் கூறினார்.

அந்த இக்கட்டான தருணத்தில் தனது சக ஊழியர் விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், அவர் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையே நிலைமையைச் சமாளிக்க உதவியதாகவும் தெரிவித்தார்.

தனது சக ஊழியர் செய்த உதவியை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும், அந்த அனுபவத்தைத் தனது வாழ்நாள் இறுதிவரை நினைவில் வைத்திருப்பேன் என்றும் கேப்டன் ஸ்மிட் மச்சார் உருக்கமாகத் தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V