Enter your Email Address to subscribe to our newsletters

மத்திய பிரதேசம், 18 அக்டோபர் (ஹி.ச.)
நவராத்திரி காலத்தை முன்னிட்டு ஷீத்லா மாதா கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்நிலையில், அதிகாலை சுமார் 2 மணியளவில் அப்பகுதியில் நெல் ஏற்றிச் சென்ற லாரி, அங்கு நின்றிருந்த பக்தர்கள் மீது மோதியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பலர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவலைக்கிடமான நிலையில் உள்ள 7 பேருக்குச் சிறப்பு மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
விபத்து குறித்து நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், லாரியில் அளவுக்கு அதிகமாக நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்ததாகவும், அதிவேகமாக வந்த லாரி பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்து மோதியதாகவும் தெரிவித்தனர். இந்த விபத்தில் சிலர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நவராத்திரி விழாவையொட்டி நள்ளிரவு நேரத்திலும் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் கூடியிருந்த நிலையில், இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V