Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு மூலமாக கிலோ ரூபாய் 30 க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்க விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டுறவு பண்டக சாலை, ரிப்பன் கட்டிட வளாகத்தில் பள்ளிக்கல்வி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்.
பல்வேறு காரணங்களால், விலையேற்றம் ஏற்படுகிறது. மக்களுக்கு பாதிக்க கூடாது என்று தான் இந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கூறினார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
சந்தை விலையில் அத்தியாவசிய பொருட்கள் அரசு சார்பில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. 6 வகையான மளிகை பொருட்கள், குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
சந்தையில் எவ்வளவு விலை ஏறினாலும், இங்கு ஒரே விலையில் தான் வழங்கப்படும்.
பல்வேறு காரணங்களால், விலையேற்றம் ஏற்படுகிறது. மக்களுக்கு பாதிக்க கூடாது என்று தான் இந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இது யாரையும் குறை சொல்லும் நேரம் அல்ல. அதிகாரிகள் இரவு முழுவதும் சிறப்பாக வேலை செய்ததால் மழைநீர் விரைந்தது வெளியேற்றப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக வேலை முடிவு பெறவில்லை.
அதையும் விரைந்து முடிப்போம். இன்னும் வேகமாக மழை வரும் நேரத்திலும் இந்த பணி தொடரும்.
மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிந்ததாக கடந்த ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த மலை சீசன் முடிந்தவுடன் தான் அது தெரியவரும். ஆனால் கடந்த ஆட்சியில் ஏன் மழைநீர் தேங்கி நின்றது என அனைவருக்கும் கேள்வி இருந்தது.
தற்போது மழைநீர் வடிகால் பணிகள் அதிவேகமாக நடந்து வருகிறது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் அனைத்து அதிகாரிகளையும் அழைத்துப் பேசி நடவடிக்கை எடுத்ததால் தான் தற்போது இந்த நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வரின் ஆலோசனையின் பெயரில் அனைவருக்கும் தனித்தனியாக பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயதானவர்களுக்கு பெண்களுக்கு முன் கூட்டியே மாநகராட்சி சார்பில் தொடர்பு கொள்ளப்பட்டு அவர்களுக்கு உதவி செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் வெளியேற்றம் செய்யப்பட்டு உள்ளன. சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் தான் பாதிப்பு அடைந்துள்ளன.
வானியல் ஆய்வு மையத்தோடு நாம் தொடர்பில் உள்ளோம் அவர்களுடன் ஆலோசித்து தேவைப்படும் நேரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்
Hindusthan Samachar / LOGESHWARI V