வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றம்!
சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.) சென்னையில் பெய்த கனமழை காரணமாக வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் உள்ள பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் சாலைகளில் செல்வதற்குச் சிரமம் ஏற்பட்டதுடன், வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து,
Stagnant rainwater completely cleared from Velachery AGS Colony


சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)

சென்னையில் பெய்த கனமழை காரணமாக வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் உள்ள பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் சாலைகளில் செல்வதற்குச் சிரமம் ஏற்பட்டதுடன், வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, தேங்கிய மழைநீரை வெளியேற்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

ராட்சத மோட்டார் இயந்திரங்கள் மூலம் சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பணிகளின் மூலம் ஏஜிஎஸ் காலனியின் பல்வேறு சாலைகளிலும் தேங்கியிருந்த மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டது.

இதனால், தற்போது சாலைகள் இயல்பு நிலைக்குத் திரும்பி, பொதுமக்கள் தடையின்றிப் பயன்படுத்தும் வகையில் சீரடைந்துள்ளன.

மழைநீர் தேக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளின் பணியால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V