முதலமைச்சர் குறித்து தரக்குறைவான பேசிய கனிமொழி, மேயர் பிரியாவை கண்டிக்க வேண்டும் – அமைச்சர் கீர்த்தனா
சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.) சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் கீர்த்தனா, இதற்கு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., சென்னை மேயர் பிரியா ஆகியோர் கண்டனம் தெரிவிக
கீர்த்தனா


சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.)

சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் கீர்த்தனா, இதற்கு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., சென்னை மேயர் பிரியா ஆகியோர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

அரசியல் மேடைகளில் பெண்களைத் தரக்குறைவாகப் பேசும் திமுக தலைவர்களின் அணுகுமுறையை மக்கள் இடைத்தேர்தல் தோல்விகள் மூலம் தண்டித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் திமுக மகளிரணியைச் சேர்ந்த ஒருவர் பேசியதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், அப்போது அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா சிரித்ததாகவும், கனிமொழி எம்.பி. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தி காரணமாக முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதும், அதனை மேடையில் அமர்ந்திருப்பவர்கள் ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் மேடைகளில் பெண்கள் பங்கேற்பது மட்டுமின்றி, பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் கீர்த்தனா, இச்சம்பவம் குறித்து கனிமொழி எம்.பி. மற்றும் மேயர் பிரியா ஆகியோர் கண்டனம் தெரிவிக்கப் போகிறார்களா அல்லது மௌனமாகக் கடந்து செல்லப் போகிறார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திமுகவினரின் பேச்சுகளைத் தமிழக மக்கள் கவனித்து வருவதாகவும், வரும் தேர்தல்களில் அநாகரிகப் பேச்சுகளுக்குத் திமுக தோல்வியைச் சந்திக்கும் என்றும் தனது எக்ஸ் பதிவில் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam