Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 19 அக்டோபர் (ஹி.ச.)
ரிஷிவந்தியம் அருகே உள்ள வெங்கலம் கிராமத்தின் புதுவெங்கலம் பகுதியில், பெட்ரோல் பங்க் அருகே இரண்டு விவசாயக் கிணறுகள் உள்ளன. இந்நிலையில், குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்ததாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், முதலில் அங்கிருந்த ஒரு விவசாயக் கிணற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அங்கு எதுவும் கண்டறியப்படாததால், அருகிலிருந்த மற்றொரு கிணற்றில் தேடுதல் பணியைத் தொடர்ந்தனர்..
சுமார் 50 அடி ஆழம் கொண்ட இரண்டாவது விவசாயக் கிணற்றில் அதிக அளவில் தண்ணீர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியிலும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் கிடைத்ததிலிருந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் தேடுதல் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கிணற்றில் யாரேனும் விழுந்துள்ளார்களா என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை.
குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்ததாகக் கூறப்படும் தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீயணைப்புத் துறையினரும் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V