Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 அக்டோபர் (ஹி.ச.)
அண்ணா பல்கலைக்கழக முறைகேடுகள் தொடர்பாக பல்கலைக்கழக டீனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த இணைப் பேராசிரியர் வெங்கடேஷை சஸ்பெண்ட் செய்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பணி அனுபவச் சான்று தொடர்பான விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து இணைப் பேராசிரியர் வெங்கடேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, பல்கலைக்கழக டீனுக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை வெங்கடேஷ் மேற்கொண்டதால், அவரை உள்நோக்கத்துடன் சஸ்பெண்ட் செய்துள்ளதாக அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம், வெங்கடேஷை சஸ்பெண்ட் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ