Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 அக்டோபர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாழவல்லான் பகுதியில் காந்தி ஜெயந்தி நாளில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏரல், சிவகளை பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் வத்திராப்பு (49) மற்றும் செபத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜ் மகன் அந்தோணி ஆலோசனை பிரிட்டன் (38) ஆகியோர் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 698 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காந்தி ஜெயந்தி நாளில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி மதுபானங்களை விற்பனை செய்தது தொடர்பாக இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ