Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்சார சேவைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாக பதிவு செய்து, விரைவாகத் தீர்வு பெறும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் புதிய ‘TNEB WhatsApp Chatbot’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படியும், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி. டி. ஆர். நிர்மல் குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாக பதிவு செய்வதுடன், அவற்றை உரிய அலுவலர்களிடம் காலதாமதமின்றி கொண்டு சேர்த்து, விரைவான குறைதீர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது வாட்ஸ்அப் செயலியில் 94987 94987 என்ற எண்ணை பதிவு செய்து, அதில் ‘HI’ என குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். தொடர்ந்து, அலைபேசி எண் அல்லது மின் இணைப்பு எண்ணின் மூலம் புகார் தொடர்பான விவரங்கள் பெறப்படும்.
புகார் பதிவு செய்யப்பட்டதும், அது சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உடனடியாக அனுப்பப்பட்டு, குறையைச் சரிசெய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த தானியங்கி புகார் பதிவு வசதியின் மூலம் பொதுமக்கள் மின்சார சேவைகள் தொடர்பான குறைகளை எளிதாகவும் விரைவாகவும் தெரிவித்து, உரிய காலத்தில் தீர்வு பெற முடியும் என தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ