ஆசிய விளையாட்டு - இந்திய கடற்படை வீராங்கனை அஞ்சி சோஜனுக்கு வெள்ளிப் பதக்கம்
அய்ச்சி-நகோயா, 02 அக்டோபர் (ஹி.ச.) ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வரும் நிலையில், இந்திய கடற்படையைச் சேர்ந்த அஞ்சி சோஜன் நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று
Asia game


அய்ச்சி-நகோயா, 02 அக்டோபர் (ஹி.ச.)

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வரும் நிலையில், இந்திய கடற்படையைச் சேர்ந்த அஞ்சி சோஜன் நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

பெண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் அஞ்சி சோஜன் அதிகபட்சமாக 6.53 மீட்டர் தூரம் தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

சீனாவின் ஹுவாங் யிங்யிங் 6.55 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார்.

மற்றொரு சீன வீராங்கனை டான் மெங்யி 6.46 மீட்டர் தூரத்துடன் வெண்கலப் பதக்கம் பெற்றார். இதனால் வெறும் 2 செ.மீ. வித்தியாசத்தில் அஞ்சி சோஜன் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டார்.

இந்தப் பதக்கம் அஞ்சி சோஜனுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிடைத்த இரண்டாவது பதக்கம் ஆகும். இதன் மூலம் தொடர்ந்து இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையையும் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்திய கடற்படையில் Chief Petty Officer பதவி வகித்து வரும் அஞ்சி சோஜன், ஆயுதப்படையில் இணைந்த பிறகு சர்வதேச அளவில் தனது மூன்றாவது பதக்கத்தை வென்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டைப் பாதுகாக்கும் பணியுடன் விளையாட்டிலும் இந்தியாவுக்காக சாதிப்பது பெருமையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதக்கத்தை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்த அஞ்சி சோஜன், தேசியக் கொடியை உயர்த்துவதற்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்ற உணர்வையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த வெற்றி தனது குடும்பத்தினருக்கும், தன்னை ஆதரித்த அனைவருக்கும் பெருமை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 2026 ஆசிய விளையாட்டில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அக்டோபர் 2-ஆம் தேதி பிற்பகல் நிலவரப்படி இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களைச் சேர்த்து வருகிறது. குத்துச்சண்டை, வில்வித்தை உள்ளிட்ட போட்டிகளிலும் இந்திய வீரர்கள் முக்கிய வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்திய கடற்படையைச் சேர்ந்த வீராங்கனையான அஞ்சி சோஜனின் வெள்ளிப் பதக்கமும் இந்தியாவின் ஆசிய விளையாட்டு பதக்கப் பட்டியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக அமைந்துள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V