விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு - அக்டோபர் 4-ல் அக்ரி ஸ்டார்ட்அப் திருவிழா
தமிழ்நாடு, 02 அக்டோபர் (ஹி.ச.) திண்டுக்கல்லில் விவசாயம் மற்றும் வேளாண் தொழில்முனைவோர்களை மையமாகக் கொண்டு அக்ரி ஸ்டார்ட்அப் திருவிழா வரும் அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. வேளாண் துறையில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், விவசாயப் பொருட்களுக
Agri


தமிழ்நாடு, 02 அக்டோபர் (ஹி.ச.)

திண்டுக்கல்லில் விவசாயம் மற்றும் வேளாண் தொழில்முனைவோர்களை மையமாகக் கொண்டு அக்ரி ஸ்டார்ட்அப் திருவிழா வரும் அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. வேளாண் துறையில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், விவசாயப் பொருட்களுக்கு கூடுதல் மதிப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த நிகழ்வில் கலந்துரையாடப்பட உள்ளன.

விவசாயத்தில் உற்பத்தி செய்வதுடன் மட்டுமின்றி, அறுவடைக்குப் பிறகு பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் நிகழ்வில் விளக்கமளிக்கப்பட உள்ளது. குறிப்பாக, விவசாயப் பொருட்களுக்கு சரியான முறையில் பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தல் செய்வது தொடர்பான தகவல்கள் பகிரப்பட உள்ளன.

மேலும், தற்போதைய வேளாண் துறையில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை விவசாயப் பணிகளில் பயன்படுத்துவது குறித்தும் கருத்துகள் முன்வைக்கப்பட உள்ளன. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, செலவுகளைக் குறைப்பது மற்றும் விளைபொருட்களைச் சந்தைக்கு கொண்டு செல்வதில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

இந்த வேளாண் கருத்தரங்கு, விவசாயிகள் மட்டுமின்றி வேளாண் சார்ந்த தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயத்தை ஒரு தொழிலாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான புதிய சிந்தனைகள் மற்றும் வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் இந்த அக்ரி ஸ்டார்ட்அப் திருவிழா அமைய உள்ளது.

வேளாண் உற்பத்தியில் இருந்து சந்தைப்படுத்தல் வரை உள்ள பல்வேறு நிலைகள் குறித்து ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளும் வாய்ப்பாகவும் இந்த நிகழ்வு இருக்கும்.

Hindusthan Samachar / LOGESHWARI V