கரூரில் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காமல் தப்பிய இளைஞர்கள் - சி.சி.டி.வி காட்சி வெளியானதால் பரபரப்பு
கரூர், 02 அக்டோபர் (ஹி.ச.) கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் என்பவர் அப்பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், வாகனத்தின் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப
Petrol bunk


கரூர், 02 அக்டோபர் (ஹி.ச.)

கரூர் மாவட்டம்

மாயனூர் பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் என்பவர் அப்பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், வாகனத்தின் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்புமாறு ஊழியரிடம் கேட்டுள்ளனர்.

இதையடுத்து, பணியில் இருந்த ஊழியர் இருசக்கர வாகனத்தில் சுமார் 4 லிட்டர் பெட்ரோல் நிரப்பியுள்ளார்.

இதற்கான கட்டணமாக ரூ.440 செலுத்துமாறு கேட்டபோது, தங்களிடம் பணம் இல்லை என்றும், ஜிபே மூலம் பணம் அனுப்புவதாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை இளைஞர் ஒருவர் அணிந்துகொண்டு வாகனத்தை இயக்குவதற்கு தயாராக இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு இளைஞர், செல்போனில் பணம் செலுத்துவது போல் ஸ்கேன் செய்து பணம் அனுப்பிவிட்டதாக ஊழியரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், பணம் வரவில்லை என ஊழியர் தெரிவித்ததுடன், பணத்தை செலுத்துமாறு கேட்டுள்ளார். அப்போது இருவரும் இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

பட்டப்பகலில் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் இளைஞர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V