மும்பை சிவாஜி பூங்காவில் இன்று சி.ஜே.பி போராட்டம் - பாதுகாப்பு தீவிரம்!
மும்பை, 02 அக்டோபர் (ஹி.ச.) வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை சிவாஜி பூங்காவில் இன்று போராட்டம் நடைபெற உள்ளதாக காக்ரோச் ஜனதா பார்ட்டி அறிவித்துள்ளது. இதையொட்டி சிவாஜி பூங்கா, தாதர் ரயில் நில
Mumbai


மும்பை, 02 அக்டோபர் (ஹி.ச.)

வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை சிவாஜி பூங்காவில் இன்று போராட்டம் நடைபெற உள்ளதாக காக்ரோச் ஜனதா பார்ட்டி அறிவித்துள்ளது.

இதையொட்டி சிவாஜி பூங்கா, தாதர் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று மாலை 4 மணியளவில் சிவாஜி பூங்காவில் போராட்டத்தை தொடங்க உள்ளதாக காக்ரோச் ஜனதா பார்ட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை, தேர்தல் நடைமுறைகள் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

சிவாஜி பூங்காவில் போராட்டம் நடத்துவதற்கு மும்பை போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். சிவாஜி பூங்காவில் கூட்டம் நடத்துவதற்கான கட்டுப்பாடுகள், தேவையான மாநகராட்சி அனுமதி இல்லாதது, போக்குவரத்து பாதிப்பு மற்றும் அவசரகால வாகனங்களின் இயக்கத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகள் உள்ளிட்ட காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மாற்றாக ஆசாத் மைதானத்தில் போராட்டத்தை நடத்துமாறு போலீசார் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், போலீஸ் அனுமதி கிடைக்காத நிலையிலும் சிவாஜி பூங்காவிலேயே போராட்டம் நடைபெறும் என CJP நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கை கண்காணிக்கவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் கூடுதல் போலீசார் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிவாஜி பூங்காவின் முக்கிய நுழைவுப் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, சிவாஜி பூங்காவுக்கு அருகில் உள்ள தாதர் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், போராட்டத்தை முன்னிட்டு அதிக அளவில் மக்கள் கூடுவதை கண்காணிக்க கூடுதல் பணியாளர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், மும்பையில் இன்று நடைபெற உள்ள போராட்டத்தை முன்னிட்டு சிவாஜி பூங்கா மற்றும் தாதர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V