Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.20) சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.1,07,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேசச் சந்தை நிலவரம், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகப் பொருளாதார மற்றும் அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால், தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,07,920 ஆக உள்ளது.
24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,40,000 ஆக உள்ளது.
தங்கத்தின் விலை சர்வதேசச் சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் உலகப் பொருளாதாரச் சூழல் உள்ளிட்ட காரணிகளால் தொடர்ந்து மாற்றமடைந்து வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P