மணிப்பூரில் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் - சாலைகள் வெறிச்சோடின
மணிப்பூர், 20 அக்டோபர் (ஹி.ச.) மணிப்பூரில் விறகு சேகரிக்கச் சென்ற மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் 48 மணி நேர பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் செவ்வாய்க்கிழமையான இன்று ம
The image shared by Manipur Police.


மணிப்பூர், 20 அக்டோபர் (ஹி.ச.)

மணிப்பூரில் விறகு சேகரிக்கச் சென்ற மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் 48 மணி நேர பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் செவ்வாய்க்கிழமையான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன், வாகனப் போக்குவரத்தும் பெருமளவில் முடங்கியது. பதற்றமான சூழல் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் காஞ்சிபூர், குரை, பட்சோய் உள்ளிட்ட பகுதிகளில் காலையிலிருந்தே முழு அடைப்புப் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் சாலைகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், லாம்லாங், சிங்ஜமேய், குவாகெய்தெல், சிங்மெய்ரோங் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்திலும் போராட்டங்கள் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிப்பூரின் ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து பெரும்பாலும் இயங்கவில்லை. ஒரு சில தனியார் வாகனங்கள் மட்டுமே சாலைகளில் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தலைநகர் இம்பால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P