Enter your Email Address to subscribe to our newsletters

அரக்கோணம், 20 அக்டோபர் (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே வடமாம்பாக்கத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஜாக்லின் மேரி, தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவருக்கு 13 மற்றும் 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தவெக செயலாளர் சசிகுமார் என்பவர் ஜாக்லின் மேரிக்கு அறிமுகமானதாகத் தெரிகிறது.
அப்போது, தான் கட்சியில் ஒன்றியச் செயலாளராக இருப்பதாகவும், அவருக்குக் கட்சியில் நல்ல பதவி வாங்கித் தருவதாகவும் சசிகுமார் கூறியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜாக்லின் மேரியின் செல்போனுக்கு அவர் அடிக்கடி குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், பின்னர் இருவரும் நெருங்கிப் பழகியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், தான் கர்ப்பமானதாக சசிகுமாரிடம் ஜாக்லின் மேரி தெரிவித்தபோது, அவர் தன்னைத் திட்டியதாகப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாகத் தனக்குக் கர்ப்பம் கலைந்ததாகவும், கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறிய அவர் பின்னர் எந்தப் பதவியும் பெற்றுத் தரவில்லை என்றும் ஜாக்லின் மேரி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளிக்க முயன்றதாகவும், அப்போது தனது புகார் மனுவைப் போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V